ரஷியாவில் புதிதாக 4,993 பேருக்கு தொற்று; பாதிப்பு 9,95,319 ஆக உயர்வு
ரஷியாவில் புதிதாக 4,993 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 83 பேர் பலியாகியுள்ளனர்.


ரஷியாவில் புதிதாக 4,993 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 83 பேர் பலியாகியுள்ளனர்.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 4,993 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 9,95,319 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் உள்பட இதுவரை 17,176 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் தற்போது வரை 8,09,387 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,405 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 685 பேருக்கும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 188 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...