ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அமெரிக்காவின் லெக்சிங்டனில் ஜெனரல் 'ஸ்டோன்வால்' ஜாக்சனின் சிலை அகற்றம்

இனவெறி குற்றச்சாட்டுகளை அடுத்து, லெக்சிங்டனில் உள்ள ஜெனரல் தாமஸ் 'ஸ்டோன்வால்' ஜாக்சனின் சிலையை விர்ஜினியா ராணுவ நிறுவனம் அகற்றியுள்ளது. 

News image
லெக்சிங்டனில் ஜெனரல் 'ஸ்டோன்வால்' ஜாக்சனின் சிலை அகற்றம்
Updated On :8 டிசம்பர் 2020, 10:05 am

DIN

இனவெறி குற்றச்சாட்டுகளை அடுத்து, லெக்சிங்டனில் உள்ள ஜெனரல் தாமஸ் 'ஸ்டோன்வால்' ஜாக்சனின் சிலையை விர்ஜினியா ராணுவ கல்லூரி அகற்றியுள்ளது. 

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது கான்பெடெரேட் ஜெனரலாக இருந்த தாமஸ் 'ஸ்டோன்வால்' ஜாக்சனின் சிலை லெக்சிங்டன் ராணுவக் கல்லூரி முன்பாக உள்ளது. 

YouTube video thumbnail

இந்நிலையில், இந்த சிலைக்கு குறிப்பிட்ட சில மாணவர்கள் மட்டும் மரியாதை செலுத்த வேண்டியிருந்தது. இது இனவெறியைத் தூண்டுவதாகக்கூறி சிலையை அகற்ற மாணவர்கள் வாக்களித்த நிலையில் திங்களன்று காலை 9.45 மணிக்கு கிரேன் கொண்டு சிலை அகற்றப்பட்டது. 

இந்த பழமையான ராணுவக் கல்லூரி 1839 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.