புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் கரோனாவுக்கு பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,78,159 ஆக உயர்ந்துள்ளது. 

News image

Brazil's COVID-19 death toll tops 178,000

Updated On :9 டிசம்பர் 2020, 6:14 am

ANI

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,78,159 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகளவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் 51,088 பேர் புதிதாகத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,67,4,999 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் இதுவரை 5,85,4,709 பேர் தொற்று பாதித்து குணமடைந்துள்ளனர். 6,43,022 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும், 8,318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.