அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 1.6 கோடியைக் கடந்தது!
அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 மில்லியனைக்(1.6 கோடி) கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.


அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 மில்லியனைக்(1.6 கோடி) கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.6 கோடியைக் கடந்துள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 1,60,14,839 ஆகவும் பலி எண்ணிக்கை 297,501 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 61,35,314 ஆகவும் உள்ளது.
இந்தியா மற்றும் பிரேசிலைத் தவிர மற்ற நாடுகளில் 30 லட்சத்துக்கும் குறைவாகவே கரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் 90 லட்சத்தைக் கடந்தும், பிரேசிலில் 60 லட்சத்தைக் கடந்தும் பாதிப்பு பதிவாகியுள்ளது.
உலக அளவில் 7 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...