47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அமெரிக்க அதிபர் டிரம்பை பயங்கரவாதி என அழைத்த ஈரான் அதிபர்

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ‘பயங்கரவாதி’ டிரம்ப் வெளியேறுவதில் மகிழ்ச்சி என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி புதன்கிழமை தெரிவித்தார்.

News image
ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி
Updated On :16 டிசம்பர் 2020, 9:34 am

DIN

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து பயங்கரவாதி டிரம்ப் வெளியேறுவதில் மகிழ்ச்சி என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி புதன்கிழமை தெரிவித்தார்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டிரம்பை வென்றதையடுத்து புதிய அதிபராக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் அதிபர்  ஹசன் ரூஹானி இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். 

அமெரிக்க அதிபர் டிரம்பை சட்டவிரோதி என அழைத்த ரூஹானி டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

"பைடனின் வருகையைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் பயங்கரவாதி டிரம்ப் வெளியேறுவது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று ரூஹானி கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.