எளிமையாக நடைபெறுகிறது ஜோ பைடன் பதவியேற்பு விழா

கரோனா நெருக்கடி காரணமாக அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு விழா பொதுமக்கள் வருகையின்றி எளிமையாக நடைபெறவுள்ளது.
எளிமையாக நடைபெறுகிறது ஜோ பைடன் பதவியேற்பு விழா
Updated on
1 min read


வாஷிங்டன்: கரோனா நெருக்கடி காரணமாக அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு விழா பொதுமக்கள் வருகையின்றி எளிமையாக நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அந்த விழாவை நடத்தவிருக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அடுத்த அதிபராக ஜோ பைடனும் துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் விழா எளிமையாக நடைபெறவுள்ளது.

அந்த விழாவுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எம்.பிக்களே அழைக்கப்படுவாா்கள். விழாவின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எனவே, பதவியேற்பை நேரில் பாா்ப்பதற்காக யாரும் வர வேண்டாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக, அதிபா் பதவியேற்பு விழாவுக்கு 2 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com