ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தென்னாப்பிரிக்காவில் கரோனாவுக்கு 1,493 ஆசிரியர்கள் பலி

கரோனா வைரஸ் தொற்று உலகையை ஆட்டிப்படைத்துவரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இதுவரை 1,493 ஆசியர்களை கரோனா பலிவாங்கி உள்ளதாக கல்வி அமைச்சர் ஆங்கி மொட்ஷேகா கூறினார். 

News image

1,493 S.African teachers died due to Covid-19

Updated On :18 டிசம்பர் 2020, 10:40 am

கரோனா வைரஸ் தொற்று உலகையை ஆட்டிப்படைத்துவரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இதுவரை 1,493 ஆசியர்களை கரோனா பலிவாங்கி உள்ளதாக கல்வி அமைச்சர் ஆங்கி மொட்ஷேகா கூறினார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, 

தொற்று நோயால் ஏற்பட்ட இடையூறு காரணமாக 2020-ம் கல்வியாண்டு பெறும் சவாலானது. இந்த கடினமான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1,493 ஆசிரியர்களை நாங்கள் இழந்தோம், மேலும் பல தொழிலாளர்களை இழந்தோம், பல மாவட்ட அதிகாரிகளை இழந்தோம் என்று ஒரு மாநாட்டில் பேசும்போது அவர் கூறியுள்ளார். 

2021-ம் கல்வியாண்டு ஜனவரி 25-ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஜனவரி 27 முதல் மீண்டும் வகுப்பறைக்குத் திரும்ப உள்ளனர். 

கரோனா கால இழப்பிலிருந்து மீண்டு வர மூன்று ஆண்டு மீட்பு திட்டம் செயல்படுத்த வேண்டிய உள்ளதாக அவர் கூறினார். 

மேலும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி தென்னாப்பிரிக்காவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 8,92,813 ஆகவும் பலி எண்ணிக்கை 24,011 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.