ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ரஷ்யாவில் கரோனா வைரஸ் பாதித்த 2வது நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பினார்

ரஷ்யாவில் கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது நோயாளியும், பூரண குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2020, 8:03 am

PTI


மாஸ்கோ: ரஷ்யாவில் கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது நோயாளியும், பூரண குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.

அவருக்கு ஒரு பெட்டி நிறைய விட்டமின் மாத்திரைகளை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது.

இன்று அவர் பூரண குணமடைந்துவிட்டார். அவரால் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சிட்டா தொற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் செர்கேய் யார்சுக் தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஏராளமான விட்டமின் மாத்திரைகளை வழங்கியுள்ளோம். உடல்நலனைக் கவனமாக பார்த்துக் கொள்ளவும், இனி எப்போதும் உடல்நலன் பாதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருப்பதாகவும் மருத்துவர் கூறினார்.

கரோனா என்று அழைக்கப்படும் கோவிட்-19 வைரஸ் பாதித்த இரண்டு பேர் மட்டுமே ரஷ்யாவில் இருந்தனர். அவர்களும் பூரண குணம் அடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருமே சீனர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.