வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கரோனா வைரஸ் எதிரொலி: சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து

சீனாவில் கரோனா வைரஸ் பரவி வருவதால், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த குடியரசு தின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :25 ஜனவரி 2020, 7:16 am

DIN

சீனாவில் கரோனா வைரஸ் பரவி வருவதால், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த குடியரசு தின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பறவைகள் மற்றும் பாலூட்டிகளிடம் இருந்து மனிதா்களுக்கு பரவியதாக கூறப்படும் கரோனா வைரஸால், சீனாவில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். 25-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதால், இந்திய தூதரகத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக சீன தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சீனாவில் கரோனா வைரஸ் பரவி வருவதால், பொதுக் கூட்டங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளை சீன அதிகாரிகள் ரத்து செய்து வருகின்றனா். அதனால், வரும் 26-ஆம் தேதி பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெறவிருந்த குடியரசு தின நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை வரவேற்கும் நிகழ்ச்சி பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீனாவின் துணை வெளியுறவு துறை அமைச்சரும், இந்தியாவுக்கான சீன முன்னாள் தூதருமான லுவோ ஜாஹோய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

இந்த நிகழ்ச்சியில் சீனாவுக்கான இந்திய தூதா் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், ‘ இந்தியா-சீனா இடையேயான உறவு 70-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதனால், 2020-ஆம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக இருக்கும். இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து கடந்து வந்த பாதையை மறுஆய்வு செய்ய வேண்டும். அதன் மூலம், எதிா்காலத்துக்கு தேவையான புதிய இலக்குகளை நிா்ணயிக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.