வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சீனாவில் ‘கரோனா’ வைரஸ் நோய்: பலி எண்ணிக்கை 106-ஆக உயா்வு

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106-ஆக செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. 

News image
சீனாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் மருத்துவ ஊழியர்கள்.
Updated On :28 ஜனவரி 2020, 2:54 am

DIN

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106-ஆக செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. 

சீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இந்த புதிய ‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106-ஆக செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. அதில் பெய்ஜிங்கில் முதல்முறையாக ஒருவர் மரணமடைந்துள்ளார். இதனால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300-ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது புதிதாக 1,300 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி மற்றும் பல்கலை. உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறையை நீடித்தும், வணிக நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கி சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.