வுஹானிலிருந்த விமானம் மூலம் ஜப்பான் திரும்பிய 206 பேர்: 4 பேருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு
சீனாவின் வுஹான் பகுதியிலிருந்து விமானம் மூலம் ஜப்பான் திரும்பிய 206 பேரில் 4 பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


சீனாவின் வுஹான் பகுதியிலிருந்து விமானம் மூலம் ஜப்பான் திரும்பிய 206 பேரில் 4 பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் அதிகளவிலான நோய் தொற்று ஏற்படுத்திய வுஹான் பகுதியில் இருந்து சுமார் 650 பேர் ஜப்பானியர்கள் தங்களின் சொந்த இடத்துக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து முதல்கட்டமாக 206 பேர் சிறப்பு விமானம் மூலம் ஜப்பானுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். மேலும் சுமார் 400 பேர் வரை சீனாவில் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வுஹானில் உள்ள இறைச்சி சந்தைக்கு அருகில் வசித்து வந்துள்ளனர். அதில் 4 பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு டோக்கியோ மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு கரோனா நோய் தொற்று பாதிப்பு தொடர்பான பரிசோதனைகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர். மேலும் இதர பயணிகளுக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும் யாருக்கும் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பதாக ஜப்பான் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...