இயல்பு நிலைக்குத் திரும்பும் சீனா
சீனாவின் பெய்ஜிங்கில் திடீரென்று ஏற்பட்ட பொதுச் சுகாதார நெருக்கடியைச் சமாளிக்கும் போக்கானது 2 ஆவது நிலையிலிருந்து 3ஆவது நிலைக்குக் குறைந்துள்ளது.


சீனாவின் பெய்ஜிங்கில் திடீரென்று ஏற்பட்ட பொதுச் சுகாதார நெருக்கடியைச் சமாளிக்கும் போக்கானது 2 ஆவது நிலையிலிருந்து 3ஆவது நிலைக்குக் குறைந்துள்ளது.
இதனால், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு நடவடிக்கைகள் ஆகியவை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. அதோடு, சீனாவில் தொற்றுக்கான ஆபத்துகள் குறைவாக உள்ள இடங்களில் திரைப்பட அரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர, மாநிலங்களுக்கிடையேயான சுற்றுலா பயணமும் தொடங்கியுள்ளது. ஹுபெய் மாநிலத்தின் வூஹான் நகரில் வாழ்ந்து வரும் திரு வாங் என்பவர் இச்செய்தியைக் கேட்டவுடனே சீனாவின் கன் சூ மாநிலத்திற்குக் குடும்பத்தினருடன் செல்வதற்கான பயணச் சீட்டுகளை வாங்கியுள்ளார். அவர்கள், கன் சூ மாநிலத்தில் 6 நாட்கள் நீடிக்கும் சுற்றுலா பயணம் மேற்கொள்வர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...