தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தென் சீன கடலில் அமெரிக்க அரசியல்வாதிகளின் தந்திரம்

சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையேயான உறவைச் சீர்குலைக்கும் விதமாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்..

News image
Updated On :20 ஜூலை 2020, 7:02 am

DIN

சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையேயான உறவைச் சீர்குலைக்கும் விதமாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அண்மைக்காலமாக பலமுறை தென் சீனக் கடலில் உள்ள பதற்ற நிலையை மிகைப்படுத்தி கருத்துக்களைப் பரப்பி உள்ளார்.

அதேவேளையில், அமெரிக்க ராணுவ விமானங்களும் ராணுவ கப்பல்களும் மீண்டும் மீண்டும் தென் சீனக் கடலில் ஆத்திரமூட்டும் விதமாக நடந்துக் கொண்டுள்ளன.

தென் சீனக் கடல் சர்ச்சைக்குரிய தரப்புகளில் அமையாத அமெரிக்காவுக்கு, தென்சீனக் கடல் விவகாரத்தில் பேசும் உரிமை இல்லையே. உண்மையில்,  சீனாவுக்கும் ஆசியானுக்கும் இடையே தென் சீனக் கடல் நடத்தை விதிமுறை குறித்த கலந்தாய்வு தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த முக்கிய தருணத்திலேயே, மைக் பாம்பியோ போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள்,  தென் சீனக் கடலில் குழப்பத்தையும் பதறத்தையும் ஏற்படுத்த முயல்கின்றனர்.

சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே நிலையான உறவைச் சீர்குலைத்து, சீன வளர்ச்சியைத் தடுக்கும் நெடுங்கால திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவர்களின் முக்கிய உள்நோக்கமாகும். மேலும், இதன் மூலம்,  உள்நாட்டின் முரண்பாடுகளில் இருந்து மக்களை திசைத் திருப்பி,  கரோனா தொற்று நோய் தடுப்பில் தோல்வியை மறைக்கவும், பதற்ற நிலையை மிகைப்படுத்தி பரப்பி, அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்களை விற்கவும், அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சீனாவும் ஆசியான் நாடுகளும், திறமை மற்றும் ஞானத்துடன் தனக்குரிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். வெளிப்புறத்திலுள்ள நாடுகளும் அதில் தலையிட தேவையில்லை. அமெரிக்க அரசியல்வாதிகள், தனது நாட்டில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளின் மீது அதிக கவனத்தை குவிக்க வேண்டும் என்றும் பன்னாட்டுச் சமூகத்தில் பல்வகை குழப்பங்களை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் ஆலோசிக்கின்றோம்.

தகவல்- சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.