ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சீனத் தூதரகம் மூடல்: அமெரிக்கத் தூதரகத்தை மூட சீனா உத்தரவு 

சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக சீனாவில் அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுவதற்கான தடையை சீனா அறிவித்துள்ளது.

News image
அமெரிக்கா சீனா நடவடிக்கையால் தொடரும் பதற்றம்
Updated On :27 ஜூலை 2020, 7:35 am

DIN

சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக சீனாவில் அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுவதற்கான தடையை சீனா அறிவித்துள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையை திருட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஹாஸ்டனில் உள்ள சீன தூதரகம் மற்றும் சில சீன நிறுவனங்களை மூட சீனாவுக்கு 72 மணி நேரம் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டம், சீனா - அமெரிக்க தூதரக மாநாட்டின் விதிமுறைகளை அவமதிப்பதாக குறிப்பிட்ட சீனா அமெரிக்காவிற்கு எதிரான தனது பதிலடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

சீன தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக சீன நாட்டின் செங்டுவில் அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுவதற்கான தனது ஒப்புதலை வாபஸ் பெறுவதற்கான முடிவை சீன வெளியுறவு அமைச்சகம்  வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

”அமெரிக்காவின் நியாயமற்ற செயலுக்குத் தேவையான பதில் இது”, என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தவறான முடிவை உடனடியாகத் திரும்பப் பெறவும், இருதரப்பு உறவை மீண்டும் மேம்படுத்த வேண்டும் என்பதையுமே நாங்கள்  வலியுறுத்துவதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் சீனாவின் ஜி ஜின்பிங் அரசாங்கத்துடன் இருதரப்பு வர்த்தகத்திற்கான புதிய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ததிலிருந்து அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவு வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்கா, சீனா இடையேயான இந்த மோதல் சர்வதேச அளவில் முக்கிய கவனம் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.