ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சீனாவில் மக்களின் நுகர்வை அதிகரிக்க சிறப்புச் சலுகைகள்

கொவைட்-19 தொற்றுநோய் மனிதர்களுக்கு ஏற்படுத்தி வரும் பாதிப்பைத் தவிர சர்வதேச அளவில் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2020, 7:41 am

DIN

கொவைட்-19 தொற்றுநோய் மனிதர்களுக்கு ஏற்படுத்தி வரும் பாதிப்பைத் தவிர சர்வதேச அளவில் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.

அதில், நுகர்வுத் துறையும் ஒன்று. பணப்புழக்கம் நன்றாக இருந்தால்தான் ஒருநாட்டின் பொருளாதாரம் வலுவாகவும் நிலைத்தன்மையுடனும் இருக்கும். ஆனால், நோய் பாதிப்பு காரணமாக மக்களின் நுகர்வு தற்போது சுருங்கிப் போயுள்ளது. இது, சிறு வணிகம் நடத்தி வருபவர்கள், அங்கு பணியாற்றுபவர்கள், உற்பத்தித் துறை என பலரையும் பாதித்துள்ளது.

தற்போது, சீனாவில் ஓரிரு பகுதிகளைத் தவிர, அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் கொவைட்-19 நோய் முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் முன்புபோல கடைவீதிகளில் உலா செல்ல தயங்குகின்றனர். மக்களின் தயக்கத்தைப் போக்க அரசு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேசமயம், பேரங்காடிகள் மற்றும் வணிக அரங்குகளில் பல சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. செயலி மூலம் கடைகளில் ஒட்டப்பட்டிருக்கும் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து சலுகை விலையில் பொருள்களை வாங்கிச் செல்ல முடிகிறது. இந்த நுட்பம் நுகர்வோரை ஈர்த்துள்ளது. மேலும், பெய்ஜிங்கில் “பெய்ஜிங் நுகர்வுக் காலம்” என்ற சிறப்பு நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. கோடைக்கால விடுமுறை, தேசிய விடுமுறை, இணைய விற்பனைத் திருவிழாவாகக் கருதப்படும் நவம்பர் 11 மற்றும் டிசம்பர் 12 ஆகிய சிறப்பு தினங்கள் என பல முக்கியமான தினங்களை மையப்படுத்தி பெய்ஜிங் நுகர்வுக் காலம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கென, சிறப்புச் சலுகை நுகர்வுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு கோடைக்கால கால்பந்து பயிற்சி, கோடைக்கால முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் துவங்கப்பட உள்ளன. தவிரவும், பெய்ஜிங்கில் உள்ள 80 முக்கியமான இடங்கள் மற்றும் வணிகப் பகுதிகளில் இரவு நேரத்தில் விளக்குகள் பிரகாசமாக எரிய விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது, பெய்ஜிங்கின் இரவுப் பொருளாதாரத்தை வெளிக்காட்டும் விதம் அமையும். பேரங்காடிகள் மற்றும் வணிக அரங்குகள் ஆகியவை இணையம் வழியாக விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை பெய்ஜிங் மாநகராட்சி எடுத்து வருகிறது. சீன ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில் “நேரலை விற்பனை நிகழ்ச்சி” ஷாங்காயில் 25ஆம் நாள் நடைபெற்றது.

2 மணி நேரம் மட்டுமே நீடித்த இந்நேரலையைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியது, விற்பனைத் தொகை 41.6 கோடி யுவானைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. ஷாங்காயில் நடைபெற்றது போல சீனாவின் இதர பிரதேசங்களிலும் நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் நுகர்வோர் பயன் அடைவதுடன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் பயன் அடைகின்றனர். அனைத்தையும் விட, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டு வருவதற்கு இது பெரும் துணை புரியும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.