பிரேசிலில் ஒரே நாளில் 54,771 பேருக்கு கரோனா: மேலும் 1,206 பேர் பலி

பிரேசிலில் ஒரே நாளில் 54,771 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அந்த நாட்டில் பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 
பிரேசிலில் ஒரே நாளில் 54,771 பேருக்கு கரோனா: மேலும் 1,206 பேர் பலி

கரோனா தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பிரேசிலில், ஒரே நாளில் 54,771 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, இதுவரை அந்த நாட்டில் பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் லட்சக்கணக்கான மக்களைப் பாதித்து வருவது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சனிக்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,206 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த உயிரிழப்புகள் 48,954 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 10,32,913 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5,07000 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 22 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று  ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com