சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ரஷியாவில் புதிதாக 7,889 பேருக்கு கரோனா: 32 சதவிகிதத்தினருக்கு அறிகுறி இல்லை

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,889 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 ஜூன் 2020, 11:08 am


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,889 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக ரஷியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 7,889 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2,579 (32.7 சதவிகிதத்தினர்) பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,76,952 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 161 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. இதுவே நேற்று 181 பேர் பலியாகியிருந்தனர்.

அதேசமயம், 10,186 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்று 10,443 பேர் குணமடைந்திருந்தனர். இதுவரை மொத்தம் 3,34,592 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.