கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,471 பேருக்கு கரோனா பாதிப்பு; 89 பேர் பலி

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் 4,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கரோனாவுக்கு 89 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,590 ஆக உயர்ந்துள்ளது.

News image
ஒரே நாளில் கரோனாவுக்கு 89 பேர் பலியாகியுள்ளனர்.
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

DIN

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் 4,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கரோனாவுக்கு 89 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,590 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,471 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,81,088-ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 71,459 போ், சிகிச்சைக்குப் பிறகு அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா பாதிப்பில் சிந்து மாகாணம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாகாணத்தில் 69,628 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிந்துக்கு அடுத்த இடத்தில் பஞ்சாப், கைபா் பாக்துன்கவா மாகாணங்கள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.