பாம்பியோ அரசியல் வைரஸைப் பரப்புவதை நிறுத்த வேண்டும்: சீனா

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ காணொலி மூலம் கோபன்ஹாகன் ஜனநாயக உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
மைக் பாம்பியோ
மைக் பாம்பியோ

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ காணொலி மூலம் கோபன்ஹாகன் ஜனநாயக உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் பேசிய போது அவர் சீனா தொடர்பான சில கேள்விகளுக்குப் பதிலளித்தார். 

அவரின் இந்த உரை, சீனா மீது மீண்டும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதாகவும், சீனாவுடனான இதர நாடுகளின் உறவைச் சீர்குலைக்கும் வகையிலும் அமைந்திருந்தது. சீனா தொடர்பான அவரின் கூற்று, உண்மைக்கும் சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டுக்கும் புறம்பானது. 

சர்வதேச சமூகத்தில் அவரது கூற்றுக்கு ஆதரவு இல்லை. அவர் அரசியல் வைரஸைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் சீன-அமெரிக்க ஒத்துழைப்பைச் சீர்குலைப்பதற்குப் பதிலாக, இரு நாட்டு ஒத்துழைப்புக்கு துணை புரியும் வகையிலான செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் சீனா விரும்புகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com