கரோனா பற்றியே தெரியாதவர்கள் இருப்பார்களா? நினைப்பதை விட அதிகம்

உலகின் ஏதோ ஒரு மூளையில் இன்னமும் சிலருக்கு கரோனா பற்றியே தெரியாது என்று சொன்னால் நம்புவதற்கு சற்று கடினம்தான்.
இன்னமும் சிலருக்கு கரோனா பற்றியே தெரியாது என்றால் நம்புவதற்கு கடினம்தான்
இன்னமும் சிலருக்கு கரோனா பற்றியே தெரியாது என்றால் நம்புவதற்கு கடினம்தான்


ஜோஹன்னஸ்பர்க்: 2020-ஆம் ஆண்டின் முதல் பாதியை கரோனா பேரிடரே முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டது. அதே சமயம், உலகின் ஏதோ ஒரு மூலையில் இன்னமும் சிலருக்கு கரோனா பற்றியே தெரியாது என்று சொன்னால் நம்புவதற்கு சற்று கடினம்தான்.

ஆனால், ஐக்கிய நாடுகள் அவையின் தன்னார்வலர்கள் மேற்கொண்ட ஆய்வில் சோமாலியாவில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள், கரோனா வைரஸ் பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் அவையின் புலம்பெயர்வோருக்கான அமைப்பு, சோமாலியாவின் எல்லைப் பகுதியைக் கடப்பவர்களிடம் இந்த கேள்வியை முன் வைக்கிறார்கள். உலகிலேயே மிக அபாயகரமான எல்லைப் பகுதியாகும் இது. 

அதாவது, உங்களது பிறப்பிடம்? எங்கு செல்கிறீர்கள்? ஏன் செல்கிறீர்கள்? என்ற கேள்விகளைத் தொடர்ந்து எத்தனை பேருக்கு கரோனா வைரஸ் பற்றி தெரியும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

ஜூன் 20-ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் 3,471 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் பாதி பேர் (51%) தாங்கள் இதுவரை கரோனா - கோவிட்-19 பற்றிக் கேள்விப்படவே இல்லை என்று பதிலளித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் மேலாளர் சான்சென்ஸ் பீன் இது பற்றி விவரிக்கையில், முதல் முறையாக நான் இதைப் பார்க்கிறேன், மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது என்றிருக்கிறார்.

இந்த ஆய்வை நடத்திய பீன் மேலும் கூறுகையில், இந்த ஆய்வை நடத்த ஆரம்பித்தபோது கரோனா பற்றித் தெரியாதவர்களின் விகிதம் 88% ஆக இருந்தது. தற்போது இது குறைந்துள்ளது. அவர்கள் செல்லும் பகுதியான ஏமனில் போர் நடக்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரிய வரவில்லை என்பதால், இது பெரிய அதிர்ச்சியை அளிக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com