சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கரோனாவில் இருந்து மீண்ட மகிழ்ச்சியை பீர் குடித்துக் கொண்டாடும் 103 வயது மூதாட்டி

அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்லே கன் தனது 103 வயது பாட்டியைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

News image
Updated On :29 மே 2020, 1:09 pm

DIN


அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்லே கன் தனது 103 வயது பாட்டியைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

அமெரிக்காவின் வில்பிர்ஹாமில் தனது 103 வயது பாட்டி ஜென்னி ஸ்டெஜ்னாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அமெரிக்காவிலேயே கரோனா தொற்றுக்கு உள்ளான மிக வயதான நபராக இவர் இருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

எப்போதுமே போராடும் குணத்தைக் கொண்டிப்பவர் எனது பாட்டி. கரோனா பாதித்த போதும் அவர் தளர்ந்துவிடவில்லை. 

மூன்று வாரங்களுக்கு முன்பு வில்பிரிஹாமில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட முதல் நபராக இருந்தார் ஸ்டெஜ்னா. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நானும் எனது கணவர் ஆடம் மற்றும் 4 வயது மகள் ஆகியோர், எனது பாட்டிக்கு பிரியாவிடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவே கருதினோம். அவரிடம் பேசும்போது, எனக்காக நீங்கள் செய்த அனைத்துக்கும் நன்றி என்று கூறினேன். ஆடம் பேசும்போது, நீங்கள் சொர்கத்துக்குச் செல்ல தயாரா? என்று கேட்டதற்கு ஆம் தயார் என்று பதிலளித்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் மே 13-ம் தேதி ஸ்டெஜ்னா குணமடைந்துவிட்டதாக மருத்துவனையில் இருந்து அழைப்பு வந்தது.

நாங்கள் உண்மையிலேயே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்கிறார் ஸ்டெஜ்னாவின் குடும்பத்தினர்.

தான் கரோனாவில் இருந்து மீண்டு வந்ததை, அவர் மிகவும் விரும்பிக் குடிக்கும் குளிர்ச்சியான பியரைக் குடித்துக் கொண்டாடி வருகிறாராம். ஸ்டெஜ்னாவுக்கு இரண்டு பிள்ளைகள், மூன்று பேரப் பிள்ளைகள், நான்கு கொள்ளுப்பேரப்பிள்ளைகள், 3 எள்ளுப் பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.