யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அதிபர் தேர்தல்: 264 அவை வாக்குகள் பெற்று ஜோ பிடன் முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 264 தேர்தல் அவை வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

News image
ஜோ பிடன்
Updated On :5 நவம்பர் 2020, 12:52 pm

DIN

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 264 தேர்தல் அவை வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

உலக நாடுகளே எதிர்நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் இந்த முறை தபால் வாக்குப்பதிவு அதிகமாக வந்துள்ளது. எனவே, அவற்றை எண்ணி முடிக்க கால தாமதம் ஆவதால் இன்னும் முழுமையான முடிவுகள் வெளியிடப்படவில்லை. 

வாக்குப்பதிவு தொடங்கிய முதலே, குடியரசுக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இருவருக்கும் இடையே குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசமே இருந்தன. எனினும் தற்போதைய நிலவரப்படி அதிக வாக்குகள் பெற்று ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.

டிரம்ப் 23 மாகாணங்களையும், பிடன் 22 மாகாணங்களையும் கைப்பற்றியுள்ளனர். அலாஸ்கா, ஜார்ஜியா, நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, டிரம்ப் 214 அவை வாக்குகளையும், பிடன் 264 அவை வாக்குகளையும் பெற்றுள்ளார். மொத்தம் 538 அவை வாக்குகளில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே பிடனுக்கு இன்னும் 6 அவை வாக்குகள் கிடைத்தால் அவர் வெற்றி பெறுவார். தற்போது முடிவு அறிவிக்கப்படாத நெவாடா, பென்சில்வேனியா மாகாணங்களில் அவர் முன்னிலையில் இருக்கிறார். 

வாக்குகளின் எண்ணிக்கையை பொருத்தவரை ஜோ பிடன் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதால் அவர் அமெரிக்க அதிபராக தேர்வாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.