டிரம்ப்பை பழி தீர்த்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் தன்னை விமர்சனம் செய்த அதே சொற்களைக் குறிப்பிட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். 
டிரம்பை பழி தீர்த்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா
டிரம்பை பழி தீர்த்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் தன்னை விமர்சனம் செய்த அதே சொற்களைக் குறிப்பிட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். 

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்படுபவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சிறுமி கிரேட்டா துன்பெர்க். இவர் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடி வருகிறார்.

உலகின் முன்னணி நாடாக உள்ள அமெரிக்கா காலநிலை மாற்றத்திற்கு எதிராக உள்ள பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறக்கூடாது, உலக சூழல் நலனில் அமெரிக்கா பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என கடந்த வருடம் நடைபெற்ற உலக நாடுகளின் காலநிலை உச்சி மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

இதற்கு தனது சுட்டுரையில் பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்,“கிரேட்டா தனது கோப மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். அவர் தனது நண்பர்களுடன் திரைப்படத்திற்கு செல்ல வேண்டும். பொறுமை கிரேட்டா! பொறுமை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியாவதில் இழுப்பறி நீடித்தாலும், தற்போதைய சூழலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் முன்னணியில் உள்ளார். இதனைத் தொடர்ந்து டிரம்ப் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் எனத் தெரிவித்திருந்தார்.

அதனைக் குறிப்பிட்டு கிரேட்டா துன்பெர்க், “டிரம்ப் அவரது கோப மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். அவர் தனது நண்பர்களுடன் திரைப்படத்திற்கு செல்லட்டும். பொறுமை டிரம்ப்! பொறுமை.” என தனது சுட்டுரைப் பதிவில் கிண்டலடித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பைத் தோற்கடிக்க ஜோ பிடனுக்கு அமெரிக்க வாக்காளர்கள் வாக்களிக்க கிரேட்டா கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com