யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அமெரிக்கத் தேர்தல்: ஜார்ஜியாவிலும் டிரம்ப்பை முந்திய ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இழுபறி நீடித்து வந்த ஜார்ஜியா மாகாணத்தில் அதிபர் டெனால்டு டிரம்ப்பை ஜோ பிடன் முந்தினார்.

News image
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் (கோப்புப்படம்)
Updated On :6 நவம்பர் 2020, 10:50 am

DIN

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இழுபறி நீடித்து வந்த ஜார்ஜியா மாகாணத்தில் அதிபர் டெனால்டு டிரம்ப்பை ஜோ பிடன் முந்தினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளரும், அதிபருமான டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அலாஸ்கா, நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

ஜார்ஜியா மாகாணத்தில் இருவருக்கும் இடையே பெரிய அளவில் வாக்குகள் வித்தியாசமின்றி இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது ஜோ பிடன் டிரம்ப்பை முந்தியுள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 அவை வாக்குகளில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில், டிரம்ப் 214 அவை வாக்குகளையும், பிடன் 264 அவை வாக்குகளையும் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.