ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜோ பிடன் வெற்றி: அமெரிக்காவில் கொண்டாட்டம்

அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெற்ற வெற்றியை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :9 நவம்பர் 2020, 9:50 am

DIN

அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெற்ற வெற்றியை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சியாட்டில், வாஷிங்டன் டி.சி. போன்ற இடங்களில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பைக் கிண்டலடித்து, நீங்கள் தூக்கியெறியப்பட்டு விட்டீர்கள் என்று மக்கள் முழக்கமிட்டனர்.

ஜோ பிடன் வெற்றிச் செய்தி பரவத் தொடங்கியதுமே லாஸ் வேகாஸ் நகரில் மெக்சிக - அமெரிக்கர்களான பிடன் ஆதரவாளர்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

இதேபோல, அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸில் சிறுசிறு குழுக்களாகத் திரண்ட ஜோ பிடன் ஆதரவாளர்கள் அவருடைய வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

அமெரிக்கா முழுவதும் பரவலாக அதிபர் (தேர்வு) ஜோ பிடன், துணை அதிபர் (தேர்வு) கமலா ஹாரிஸ் ஆகியோரின் வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.