போர் வீரர்கள் நினைவிடத்தில் ஜோ பைடன் மரியாதை

முன்னாள் போர் வீரர்கள் தினத்தையொட்டி,  ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் பிலடெல்பியாவில் உள்ள கொரிய போர் நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 
போர் வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன்.
போர் வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன்.

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், முன்னாள் போர் வீரர்கள் தினத்தையொட்டி, தனது மனைவி ஜில் பைடனுடன் பிலடெல்பியாவில் உள்ள கொரிய போர் நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

கடந்த 2015ல் மூளை புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பைடனின் மகன் பியூ, டெலாவேர் ராணுவ தேசிய காவல் படையில் மேஜராக இருந்தார். இதுகுறித்து பைடன் பலமுறை பிரசாரத்திலும் கூட தனது மகன் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். 

பைடன் துணை அதிபராக இருந்தபோது, உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்காக குரல் கொடுத்த முதல் பெண்மணி என ஜில் பைடனைக் குறிப்பிடலாம். அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கி செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

பைடன், பிலடெல்பியாவில் போர் வீரர்கள் தினத்தை அனுசரித்த அதே நேரத்தில் டொனால்ட் டிரம்ப் ஆர்லிங்டன் தேசியக் கல்லறையில் உயிரிழந்த முன்னாள் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com