கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவில் இதுவரை சுமார் 10,39,464 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கரோனா தொற்றுக்கு புதிதாக 1,12,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு இது மிக அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் குழந்தைகள் நல மையம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனைகளின் கூட்டமைப்பு இணைந்து வெளியிட்ட புள்ளிவிவரத்தில்,
கடந்த நவம்பர் 12-ம் தேதி வரை மொத்தம் 10,39,464 குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இது மிக அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு விகிதம் 11.5 ஆக உள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,11,97,791 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,47,142 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டுக்கான வன்பொருள்கள்: தெலங்கானாவில் இருந்து அனுப்பி வைப்பு

பைக்கில் தவறி விழுந்து தாய் உயிரிழப்பு: மகன் பலத்த காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


