வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அமெரிக்க அதிபருக்குக் கரோனா: விரைவில் குணமடைய சீன அதிபர் வாழ்த்து

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதியான நிலையில் அவர்கள் விரைவில் குணமடைய சீன அதிபர் ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
சீன அதிபர் ஷி ஜின்பிங்
Updated On :3 அக்டோபர் 2020, 11:26 am

DIN

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதியான நிலையில் அவர்கள் விரைவில் குணமடைய சீன அதிபர் ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்புக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் அவர்கள் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்க அதிபர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்துள்ளதாக சீன அரசு செய்தி ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா தொற்று உறுதியானதைக் குறித்து வருத்தமடைந்த ஷி ஜின்பிங், ட்ரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்ததாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்காவிற்கான சீனத் தூதர் குய் தியான்காய் மற்றும் சீன வெளியுறவு அமைச்சகம் ஆகியவை ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி குணமடைய வாழ்த்து தெரிவித்திருந்தது. 

கரோனா தொற்று விவகாரத்தில் சீன அரசை ட்ரம்ப் கடுமையாக குற்றம்சாட்டி வரும் நிலையில் சீன அதிபர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.