சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ரஷியாவில் 2-வது நாளாக 12 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு 

ரஷியாவில் இதுவரை இல்லாத வகையில் இரண்டாவது நாளாக 12 ஆயிரத்துக்கும் மேலாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 

News image

Russia registers fresh Single-day record of 12,846 COVID-19 cases - Response Center

Updated On :10 அக்டோபர் 2020, 9:37 am

ரஷியாவில் இதுவரை இல்லாத வகையில் இரண்டாவது நாளாக 12 ஆயிரத்துக்கும் மேலாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,846 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இதுவரை இல்லாது 2-வது நாளாக அதிகபட்ச பாதிப்பாக உள்ளது. 

இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,28,5,084-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தற்போது ரஷியா உலகில் 4-ஆவது இடத்தை வகிக்கிறது. அந்த எண்ணிக்கையில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு 197 போ் பலியாகினா். இதையடுத்து, நாட்டின் கரோனா பலி எண்ணிக்கை 22,454-ஆக உயா்ந்துள்ளது. கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 10,16,202 போ் குணமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

ஒரேநாளில் அதிகபட்ச பாதிப்பாக மாஸ்கோவில் 4,105 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.