ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 10.85 லட்சமாக உயர்வு

கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 10.85 லட்சமாக உயர்ந்துள்ளது. 

News image

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 10.85 லட்சமாக உயர்வு

Updated On :13 அக்டோபர் 2020, 6:54 am

கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 10.85 லட்சமாக உயர்ந்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 3,80,43,916 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,8,60,6252 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 10,85,375 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 8,35,2,289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 69,108 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 8,03,7,789 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,20,011 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொற்று பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு இதுவரை 109,894 பேர் உயிரிழந்துள்ளனர், மூன்றாம் இடத்தில் பிரேசிலும், நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.