வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 லட்சத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் 214 நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 லட்சத்து 61 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது , அதே நேரத்தில் 2,88,46,861 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
உலக முழுவதும் இதுவரை 10,90,811 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 62,98,705 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 80,90,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,20,873 பேர் உயிரிழந்துள்ளனர்.
நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா மற்றும் பிரேசில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளது. இந்தியாவில் 72,37,082 பேரும், பிரேசிலில் 51,14,823 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு பட்டியலில் பிரேசில் 1,51,063 உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 1,10,617 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புக்கு மோசமான நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவில் 13,26,178 பாதிப்பு மற்றும் 22,966 உயிரிழப்புகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


