பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1.54 லட்சமாக உயர்வு
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 271 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1,52,1760 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா இறப்புகள்
பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா இறப்புகள்
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 271 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1,52,1760 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,383 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, மொத்த பாதிப்பு 5,250,727 ஆக உள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவது கட்டாயமாக இருக்கக்கூடாது, ஆனால் தடுப்பூசிகள் கிடைக்கும்போது சுகாதார அமைப்பால் இலவசமாக வழங்கப்படும் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கூறினார்.
நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோவில் இதுவரை 10,64,039 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 38,035 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...