கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சீன அதிபரின் பாகிஸ்தான் பயணம் ஒத்தி வைப்பு

கரோனா தொற்றுப் பரவலால் செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் பாகிஸ்தான் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
சீன அதிபர் ஷி ஜின்பிங்
Updated On :4 செப்டம்பர் 2020, 12:21 pm

DIN

கரோனா தொற்றுப் பரவலால் செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் பாகிஸ்தான் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் முக்கிய நட்பு நாடுகளாக பாகிஸ்தான் மற்றும் சீனா விளங்கி வருகிறது. பாகிஸ்தான் சீனா இடையே பொருளாதார நடவடிக்கைகளுக்காக பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாட்டிற்கான சீனத் தூதர் யாவ் ஜிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் செல்லவிருந்த சீன அதிபரின் பயணம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் மறுதேதியை இருநாட்டு அதிகாரிகளும் ஆலோசித்து வருவதாகவும், பயண தேதி இறுதியான பின் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் சீன அதிபரின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.