செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பிரேசிலில் ஒரேநாளில் 50,163 பேர் கரோனாவுக்கு பாதிப்பு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 50,163 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 4,09,1,801 ஆக அதிகரித்துள்ளது.

News image

Brazil's COVID-19 tally stands at 4.09 million

Updated On :5 செப்டம்பர் 2020, 6:32 am

ANI

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 50,163 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 4,09,1,801 ஆக அதிகரித்துள்ளது என்று தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான தரவுகளை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது..

ஒரேநாளில் இறப்பு எண்ணிக்கை 888 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பலி 1,25,502 ஆக பதிவாகியுள்ளது. 

ஒரு நாள் முன்னதாக, பிரேசில் கரோனா பாதிப்பு 43,773 ஆகவும், பலி 834 ஆகவும் இருந்தது. 

மேலும், 6.19 லட்சத்துக்குக்கும் அதிகமான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக கரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்றுவரை, உலகளவில் 26.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,71,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.