செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மெக்சிகோவில் கரோனா பலி எண்ணிக்கை 66,851 ஆக உயர்வு

மெக்சிகோவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 522 உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 66,851 ஆக உயர்ந்துள்ளது

News image

Mexico's COVID-19 death toll stands at 66,851

Updated On :5 செப்டம்பர் 2020, 7:23 am

ANI

மெக்சிகோவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 522 உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 66,851 ஆக உயர்ந்துள்ளது என்று துணை சுகாதார அமைச்சர் ஹ்யூகோ லோபஸ்-கேட்டெல் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஒரேநாளில் 6,196 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 6,23,090 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒரு நாள் முன்னதாக, லத்தீன் அமெரிக்காவில் 5,937 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதில் 513 பேர் உயிரிழந்தனர்.

இன்றுவரை, உலகளவில் 26.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,72,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.