உலகம் முழுவதும் 85 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தைத் தாண்டியது.
உலகம் முழுவதும் 85 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி


உலகம் முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தைத் தாண்டியது.

முதலில் சீனாவைப் பாதிக்கத் தொடங்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக உலக நாடுகளுக்குப் பரவியது. 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொற்றால் ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இந்த நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தைத் தாண்டி 85,445 ஆக உயர்ந்துள்ளது.

உலகம்:

பாதித்தோர் எண்ணிக்கை: 14,68,838

பலியானோர் எண்ணிக்கை: 85,445

குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,16,482


அமெரிக்காவில் 13 ஆயிரத்தைத் தாண்டியது பலி

பாதித்தோர் எண்ணிக்கை: 4,06,644

பலியானோர் எண்ணிக்கை: 13,088

குணமடைந்தோர் எண்ணிக்கை: 22,033


பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 938 பேர் பலி

பாதித்தோர் எண்ணிக்கை: 60,733

பலியானோர் எண்ணிக்கை: 7,097

குணமடைந்தோர் எண்ணிக்கை: 135


ஸ்பெயின்:

பாதித்தோர் எண்ணிக்கை: 1,46,690

பலியானோர் எண்ணிக்கை: 14,673

குணமடைந்தோர் எண்ணிக்கை: 48,021
 

இத்தாலி:

பாதித்தோர் எண்ணிக்கை: 1,39,422

பலியானோர் எண்ணிக்கை: 17,669

குணமடைந்தோர் எண்ணிக்கை: 26,491


பிரான்ஸ்:

பாதித்தோர் எண்ணிக்கை: 1,09,069

பலியானோர் எண்ணிக்கை: 10,328

குணமடைந்தோர் எண்ணிக்கை: 19,337


ஜெர்மனி:

பாதித்தோர் எண்ணிக்கை: 1,09,329

பலியானோர் எண்ணிக்கை: 2,096

குணமடைந்தோர் எண்ணிக்கை: 36,081

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com