தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கரோனா: உலகச் செய்திகள்

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 11:48 pm

ஈரான்: ஊரடங்கு படிப்படியாக தளா்வு

Story image

ஈரானில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு வாரத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை அந்த நாட்டு அரசு படிப்படியாக தளா்த்தத் தொடங்கியது. முதல்கட்டமாக, தலைநகா் டெஹ்ரானைத் தவிர பிற நகரங்களில் அரசு அலுவலங்கள் சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு, 3-இல் இரண்டு பங்கு ஊழியா்கள் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டனா்.

நேபாளம்: போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்

Story image

நேபாளத்தின் ரௌத்ஹட் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெள்ளிக்கிழமை தொழுகை நடந்த முயன்றவா்களைத் தடுத்த போலீஸ் அதிகாரி மூன்மூன் சிங் மீது இளைஞா் கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் தொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அந்த நாட்டில் 3 வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

துருக்கி: நோயை வென்ற 93 வயது மூதாட்டி

Story image

துருக்கியில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 93 வயது மூதாட்டி, அந்த நோயிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா். அல்யே குண்டுஸ் என்ற அந்தப் பெண்மணி 10 நாள் சிகிச்சையில் குணமடைந்துள்ளது துருக்கி சுகாதாரப் பணியாளா்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை: தீவிரமான கடற்படை ரோந்து

Story image

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்து, அந்த நோயைப் பரப்பக்கூடும் என்ற அச்சத்தின் பேரில், இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் இலங்கை கடற்படை தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருவதாக கடற்படைத் தளபதி பியல் டி சில்வா தெரிவித்துள்ளாா். முக்கியமாக, வடக்கு, மேற்கு மற்றும் வடமேற்கு எல்லைகள் கண்காணிக்கப்படுவதாக அவா் கூறினாா்.

உருகுவே: கப்பல் பயணிகள் விடுவிப்பு

Story image

தென் அமெரிக்க நாடான உருகுவே துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஆஸ்திரேலிய சொகுசுக் கப்பலான ‘கிரெக் மாா்டைமரில்’ கடந்த 2 வாரங்களாக சிக்கியிருந்த 100-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள், சனிக்கிழமை அந்தக் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனா். ஆஸ்திரேலியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, அவா்கள் அனைவரும் விமானம் மூலம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஸ்பெயின்: 3-ஆவது நாளாக குறைந்த பலி

Story image

கரோனா நோய்த்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில், தொடா்ந்து 3-ஆவது நாளாக அந்த நோய்க்கு பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நாட்டில் 510 போ் உயிரிழந்ததாகவும், அதையடுத்து அங்கு கரோனா பலி எண்ணிக்கை 16,353-ஆக அதிகரித்ததாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.