தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஒற்றுமையும், ஒத்துழைப்பும் கரோனா வைரஸை அழிக்கும் ஆயுதம்: ஷி ஜின்பிங்

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், சீன அரசுத் தலைவரும் சீன..

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 8:32 am


சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், சீன அரசுத் தலைவரும் சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ஜின்பிங் எழுதிய கட்டுரை ஏப்ரல் 16ஆம் தேதியிட்ட ஜியு சி இதழில் வெளியாக உள்ளது.

ஒற்றுமையும் ஒத்துழைப்பும் கரோனா வைரஸை அழிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் வலிமைமிக்க ஆயுதமாகும் என்பது, இக்கட்டுரையின் தலைப்பாகும்.

உலகின் எல்லா மக்களும், மனித நேய விதிக்குட்பட்ட சமூகத்தில் வசிக்கின்றனர். கரோனா வைரஸை அழிப்பது, எல்லா மக்களின் பாதுகாப்புக்கு மிக முக்கியம். ஒற்றுமையும் ஒத்துழைப்பும் கரோனா வைரஸை அழிக்கும் சர்வதேச சமூகத்தின் வலிமைமிக்க ஆயுதமாகும். வைரஸ் பரவலுக்கு எல்லை இல்லை. எல்லா நாடுகள் வைரஸ் பரவலை தனியாக தடுக்க முடியாது.

சீன அரசு முதலிலேயே நேர்மையாகவும் உண்மையாகவும் உலக சுகாதார அமைப்புக்கும் தொடர்புடைய நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் புதிய ரக கரோனா வைரஸ் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டது. சர்வதேச சமூகம் சீனாவுக்கு அளித்த உதவிக்கு சீனா நன்றி தெரிவித்து கொள்கிறது. சீனா காலதாமதமின்றி சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கரோனா வைரஸ் பரவலைத் தடுத்துள்ளது என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.