தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா தொற்று பாதித்தவர்களை மோப்ப சக்தியால் கண்டுபிடிக்க நாய்களுக்குப் பயிற்சி

உலக நாடுகள் பலவும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வரும் நிலையில், கரோனா தொற்று பாதித்தவர்களை மோப்ப சக்தியைக் கொண்டு கண்டுபிடிக்கும் பயிற்சியை நாய்களுக்கு அளித்து வருகிறா

News image

file image

Updated On :30 ஏப்ரல் 2020, 7:04 am


உலக நாடுகள் பலவும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வரும் நிலையில், கரோனா தொற்று பாதித்தவர்களை மோப்ப சக்தியைக் கொண்டு கண்டுபிடிக்கும் பயிற்சியை நாய்களுக்கு அளித்து வருகிறார்கள்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நாய்களுக்கு கரோனா தொற்று பாதித்தவர்களை மோப்ப சக்தியுடன் அறியும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 8 மோப்ப நாய்களுக்கு, கரோனா தொற்று பாதித்தவர்களை, தங்களது மோப்ப சக்தி மூலம் கண்டறியும் பயிற்சியை அளித்து வருகிறார்கள்.

இதேப்போன்ற முயற்சியை லண்டனில் உள்ள சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருந்தியல் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இதேப்போன்று மலேரியா தொற்று பாதித்தவர்களை நாய்களைக் கொண்டு கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது.

இந்த சோதனை முறை வெற்றி பெற்றால், கரோனா தொற்று பாதித்தவரக்ளைக் கண்டறியும் மிகப்பெரிய பணி எளிதாக்கப்படும், குறிப்பாக விமான நிலையங்கள், தொழிலகங்கள், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை எளிதாகக் கண்டறியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் நாய்கள் வெற்றி பெற்றால் அது ஒன்றும் அவ்வளவுபெரிய ஆச்சரியமில்லை என்றும், ஏற்கனவே போதைப் பொருட்கள், வெடிபொருட்களை மோப்ப சக்தியுடன் கண்டறிவதோடு, மலேரியா பாதித்தவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோரைக் கண்டறியும் திறனையும் மோப்ப நாய்கள் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வொரு தொற்றுக்கும் நிச்சயம் ஒரு வாசனை இருக்கும். அந்த வாசனை என்ன என்பது தெரியாது. ஆனால், அது பற்றி எல்லாம் நாய்களுக்குக் கவலை இல்லை. அவைகள் ஒன்றைத்தான் பின்பற்றுகின்றன, ஏதோ ஒன்று வேறுபடுகிறது என்பதே அது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.