கரோனாவில் இருந்து மீண்ட 103 வயது ஈரான் மூதாட்டி 

ஈரானில் 103 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
கரோனாவில் இருந்து மீண்ட 103 வயது ஈரான் மூதாட்டி 

ஈரானில் 103 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சீனாவில் உருவாகி, உலகம் முழுவதும் 164 நாடுகளுக்குப் பரவியுள்ள கரோனா வைரஸ், இதுவரை சுமாா் 2.19 லட்சம் பேரைத் தொற்றியுள்ளது. அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது. அதே போல பலியானர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9,000ஐ நெருங்கியுள்ளது. 

கரோனாவுக்கு பெரும்பாலும் முதியவர்கள் பலர் பலியாகி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களில் 22 சதவீதம் பேர் 80 வயதைக் கடந்தவர்கள் ஆவர். ஆனால் ஈரானில் 103 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கரோனா தொற்று உறுதியானதையடுத்து அந்த மூதாட்டி செம்னான் நகரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு கரோனாவில் இருந்து மீண்ட அந்த மூதாட்டி பூரண நலமுடன் வீடு திரும்பினார். கரேனாவுக்கு ஈரானில் இதுவரை சுமார் 1,000 பேர் பலியாகி உள்ளனர்.

முன்னதாக ஜெய்ப்பூரில் 85 வயதுடையவரும், இத்தாலியில் 70 வயதுடையவரும் கரோனாவில் இருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com