தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிங்கப்பூரில் மேலும் 632 பேருக்கு கரோனா; பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது!

சிங்கப்பூரில் மேலும் 632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :5 மே 2020, 9:46 am

சிங்கப்பூரில் மேலும் 632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிதாக 632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேர் மட்டுமே சிங்கப்பூர் நாட்டினர். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,410 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. சுமார் 1,457 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது என்றும் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூரில் 4,800 இந்தியர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 90 சதவீதம் பேர் வெளிநாட்டினருக்கான தங்குமிடங்களில் வசித்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.