ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 13 லட்சத்தை எட்டியது; பலி 81 ஆயிரம் ஆனது

உலகையே உலுக்கி வரும் கரோனா தொற்று அமெரிக்காவில் கடும் பாதிப்பை  ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தை எட்டிவிட்டது, பலியானோர் எண்ணிக்கை 81 ஆயிரமாக உயர்ந்துள்ளத

News image
Updated On :12 மே 2020, 7:57 am

DIN

உலகையே உலுக்கி வரும் கரோனா தொற்று அமெரிக்காவில் கடும் பாதிப்பை  ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தை எட்டிவிட்டது, பலியானோர் எண்ணிக்கை 81 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் புதிதாக 18,196 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் ஆயிரம் பேர் பலியாகினர். இதனால் அங்கு தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 81,795 -ஆக அதிகரித்துள்ளது.  

உலக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,68,490 ஆக அதிகரித்துள்ளது, இதுவரை 2,87,463 பேர் உயிரிழந்துள்ளனர், 15,33,369 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் 24,47,658 பேரில் 49,946 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமாக நியூயார்க், நியூஜெர்சி அதியவை உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.