ரஷியாவில் மேலும் 18,257 பேருக்கு வைரஸ் தொற்று; 238 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,257 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்ப து உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,257 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்ப து உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ரஷியாவில் கடந்த மாதம் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 18,000 என்ற அளவில் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. அதேபோன்று கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவில் புதிதாக 18,257 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,796 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 16,55,038 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 238 பேர் உள்பட இதுவரை 28,473 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போதுவரை 12,36,033 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 3,90,532 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரில் 2,300 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com