நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

உலகளவில் 8.68 கோடியைக் கடந்த கரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.68 கோடியாக உயர்ந்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜனவரி 2021, 8:09 am IST



உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.68 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 8,68,32,018 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 18,75,451 போ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,15,31,300 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,34,25,267 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,08,016 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்‍காவில் தொற்று பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,15,78,606 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 3,65,620 ஆக உயர்ந்துள்ளது. 

2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1, 03,75,478 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,50,151 பேர் உயிரிழந்துள்ளனர். 

3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 78,12,007 ஆக உயர்ந்துள்ளதோடு, 1,97,777-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 69,63,407 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு எதிரான கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டாவது கட்ட உருமாறிய நோய்த்தொற்று அலை தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.