நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பஞ்சாப்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டது குறித்து...

News image

மருத்துவமனையில் மீட்கப்பட்ட சிறுவன். - படம் - பிடிஐ

Updated On :46 நிமிடங்கள் முன்பு

பஞ்சாபில் ஆழ்துளைக் கிணற்றில் தவறுதலாக விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் மாவட்டத்தில், தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது புதிதாகத் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் நான்கு வயது சிறுவன் (குர்கரன் சிங்) தவறுதலாக விழுந்துள்ளான்.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும், காவல்துறையினர், மாவட்ட நிர்வாகக் குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஆகியவை அந்த இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியைத் தொடங்கின. ஆழ்துளைக் கிணற்றின் ஆழம், சுமார் 20 முதல் 30 அடி வரை இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதனிடையே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவனுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டதோடு, கேமரா வழியாக அவனது நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், பல்வேறு மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் ஈடுபட்ட தீவிர ஒன்பது மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். மேலும், அந்தச் சிறுவனை மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

A boy who accidentally fell into a borewell in Punjab was safely rescued.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.