பஞ்சாபில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன.
பஞ்சாப் மாநிலம், சக் சமனா கிராமத்தில் தனது வீட்டருகே புதிதாகத் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை குர்கரன் சிங்(4) சிறுவன் தவறுதலாக விழுந்துள்ளான். தகவல் கிடைத்ததும், போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியைத் தொடங்கின.
மீட்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக பஞ்சாப் அமைச்சர் ரவ்ஜோத் சிங்கும் சம்பவ இடத்திற்கு வந்திருந்தார். துணை ஆணையர் ஆஷிகா ஜெயின், மூத்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் மீட்புப் பணியை மேற்பார்வையிட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்திருந்தது. ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தைக்கு குழாய் வழியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டதோடு கேமரா வழியாக கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
Summary
A four-year-old boy accidentally fell into a newly dug borewell near his house here on Friday evening, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனியார் பள்ளிகளில் 5% வரை கட்டணம் உயர்த்தலாம்: பஞ்சாப் அரசு!
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

ஐபிஎல் 2026: வாழ்வா? சாவா? போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு!

பஞ்சாப்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



