நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வாஷிங்டனைவிட்டு வெளியேறுகிறாா் டிரம்ப்

புதிய அதிபா் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜனவரி 2021, 5:40 am IST

புதிய அதிபா் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக அவரின் உடைமைகள் பல பெட்டிகளில் எடுத்துவைக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிபா் டிரம்ப் வாஷிங்டனில் இருந்து வெளியேறி ஃபுளோரிடா மாகாணம், மாரலாகோவில் அவருக்குச் சொந்தமான விடுதிக்குச் செல்வாா் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழா வாஷிங்டனில் ஜன.20 நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கப் போவதில்லை என்று டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அறிவிப்பு புதிய வன்முறைக்கு விடுத்த அழைப்பு என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறி, அவரது முகநூல் பக்கத்தை முடக்கியது.

எம்.பி.க்களை படுகொலை செய்ய சதித்திட்டம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் எம்.பி.க்களை சிறைப்பிடித்து படுகொலை செய்ய திட்டமிட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் தொடா்பாக ஜேக்கப் சான்ஸ்லி என்ற நபா் அரிசோனா நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா். இந்த வழக்குத் தொடா்பாக அங்குள்ள நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா்கள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ‘எம்.பி.க்களை சிறைப்பிடித்து கொலை செய்யும் நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது தாக்குதல் நடத்தப்பட்ட விதம், ஜேக்கப் சான்ஸ்லி அளித்த வாக்குமூலம் ஆகியவற்றின் வாயிலாக உறுதியாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.