புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒருநாளில் 3,459 பேர் பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,459 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

News image
Updated On :15 ஏப்ரல் 2021, 5:27 am

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,459 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73,513 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 13,673,507 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், ஒரேநாளில் தொற்று பாதித்த 3,459 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 361,884 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பலி எண்ணிக்கை 3,808 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக பிரேசிலில் கரோனா பலி நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. 

 பிரேசிலில் இதுவரை 2.95 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.