புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

உலகளவில் கரோனா பாதிப்பு 13.88 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 13.88 கோடியாக உயர்ந்துள்ளது. 

News image

உலகளவில் கரோனா பாதிப்பு 13.88 கோடியைத் தாண்டியது

Updated On :15 ஏப்ரல் 2021, 5:50 am

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 13.88 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

வியாழக்கிழமை காலை நிலவரப்படி உலகம் முழுவதும் இதுவரை 13,88,65,551 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 29,86,118 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,16,47,082 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,42,32,351 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,591பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,21,49,223 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கைகை 5,78,092-ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,40,74,564 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,73,152 பேர் உயிரிழந்துள்ளனர். 

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,36,77,564 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் பாதித்தோர் மற்றும் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,62,180 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.