ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,995 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 397 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த கரோனா பாதிப்பு தற்போது படிப்படியக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 8,995 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 8,944 ஆக இருந்தது.
இதையடுத்து மொத்த பாதிப்பு 46,84,148 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 2,476 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 397 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி 104,795 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் கரோனாவுக்கு 398 பேர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் அங்கு இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
எனினும் ரஷியாவில் இதுவரை 4,310,557 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 268,796 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான்

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


